Wednesday, June 14, 2017

தொழில்

முதலில் உனக்காக ஒரு தொழிலை நிச்சயப்படுத்தி கொள்.

முன்னுக்கு வருவதற்க்கு இதுவே அடித்தளமாகும்.உனக்கென ஒரு தொழிலை நிர்ணயித்துக் கொள்ளாமல் கண்ட தொழிலிலும் மனதை அலையவிட்டு "இது நல்லதா? அது நல்லதா?" என்று நீ ஆராய்ச்சி செய்யத் தொடங்கினால் உன்னுடைய அருமையான இளமை பருவம் வீணாகி விடும்.

நீ தேர்ந்தெடுக்கும் தொழிலின் மூலம் தான் நீ வாழ்க்கையை உயர்த்திச் சிறப்படைய வேண்டும் என்றாலும் அத்தொழில் மக்களுக்கு பயனுடையதா? மக்கள் மத்தியில் அந்த தொழில் வளர்ச்சி பெற வழிவகைகள் உண்டா என்பதை ஆராய்ந்து ஒரு முடிவு செய்து கொள்.

ஏனெனில், ஒரு தொழிலில் நீ முன்னுக்கு வருவதற்க்கு தளராத முயற்சி மட்டும் போதாது மக்களிடைய அந்த தொழில் செல்வாக்கு பெற்றால்தான் நீ உயர முடியும்.மக்களின் செல்வாக்கு பெறாத எந்த தொழிலுக்காகவும் நீ உடல் எலும்பை ஒடித்துப் பாடுபட்டாலும் அது பலன் தாராது.